• Inner slider 1

உண்மையான கடன் குறைநிரப்புதலை போன்று வங்கிகளுக்கும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபன கடன் உத்தரவாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

உண்மையான கடன் குறைநிரப்புதலை போன்று வங்கிகளுக்கும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபன கடன் உத்தரவாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

உத்தரவாதமானது வங்கியின் முழுமையான குறுகிய கால ஏற்றுமதி கடன் துறையின் இடர் - நிறையேற்றப்பட்ட மூலதன போதுமையினை அதிகரிகின்றது. வங்கியில் மூலதன போதுமையின் இவ் அதிகரிப்பானது பேசல் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தற்கால சர்வதேச நடைமுறைகள் மற்றும் தேவைப்பாடுகளை பேணுவதில் இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட மூலதன போதுமை தர நியமங்களை நிறைவு செய்கின்ற அதே வேளை எற்றுமதி நிதியினை அதிகளவில் கடன் வழங்குவதற்கும் வங்கிகளை இயலச் செய்கின்றது. இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் உத்தரவாதங்களினால் காப்பிடப்படுகின்ற கடன் வசதிகளின் நிறையேற்றப்பட்ட மூலதன போதுமை விதாசாரம் 50 வீதமாகும்.

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபன கடன் உத்தரவாத தீர்வுகள்

  • நியமமான கப்பற் சரக்கு அனுப்புவதற்கு முந்திய கடன் உத்தரவாதம்

    கப்பற் சரக்கு அனுப்புவதற்கு முந்திய மட்டத்தில் ஏற்றுமதியாளர்களின் கடன்தீர்க்க வகை இன்மை மற்றும் நிதியின்மை என்பவற்றிற்கு எதிராக வர்த்தக வங்கிகளை காப்பிடுகின்றது.

     
  • சிறியளவிலான கப்பற் சரக்கு அனுப்புவதற்கு முந்திய கடன் காப்புறுதி

    மிகவும் சுதந்திரமான நியதிகளில் புதிய மற்றும் சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு கப்பற் சரக்கு அனுப்புவதற்கு முன்னர் நிதி வழங்குவதற்கு வர்த்தக வங்கிகளை ஊக்குவிக்கின்றது.

     
  • ஏற்றுமதி கடன் உத்தரவாதம்

    விற்பனை வரவுகள் கிடைக்கும் வரை மொத்த காலத்திற்கும் ஏற்றுமதியாளர்களின் கொடுப்பனவின்மை மற்றும் கடன் தீர்க்க வகையின்மை என்பவற்றிகொதிராக வர்த்தக வங்கிகளுக்கு காப்பீடளிகின்றது.

     
  • கப்பற் சரக்கு அனுப்புவதற்கு முந்திய மொத்த புரள்வு கடன் உத்தரவாதம்

    கப்பற் சரக்கு அனுப்புவதற்கு முந்திய வங்கியின் முழுமையான கடன் துறையினையும் காப்பிடுகின்றது.

  • நியமமான கப்பற் சரக்கு அனுப்பயதன் பிந்திய கடன் உத்தரவாதம்

    இவ் உத்தரவாதமானது கப்பற் சரக்கு அனுப்பியதன் பிந்திய மட்டத்தில் ஏற்றுமதியாளரின் கொடுப்பனவின்மை மற்றும் கடன் தீர்க்க வகையின்மை என்பவற்றிகொதிராக வர்த்தக வங்கிகளுக்கு நட்டோத்தரவாதம் அளிக்கின்றது.

     
  • சிறியளவிலான கப்பற் சரக்கு அனுப்பியதன் பிந்திய கடன் உத்தரவாதம்

    தமது வங்கி வசதிகளுக்காக சிறியளவிலான ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     
  • ஏற்றுமதி கடன் வழங்குதல் கடன் உத்தரவாதம்

    திறந்த கணக்கு கொடுக்கல் வாங்கல்லை காப்பிடுவதற்காக வங்கிகளுக்கான கப்பற் சரக்கு அனுப்பியதன் பிந்திய கடன் உத்தரவாதமாகும்.

     
  • கப்பற் சரக்கு அனுப்பியதன் பிந்திய மொத்த புரள்வு கடன் உத்தரவாதம்

    கப்பற் சரக்கு அனுப்புவதன் பிந்திய வங்கியின் முழுமையான கடன் துறையினையும் காப்பிடுகின்றது.

  • ஏற்றுமதி உற்பத்தி கடன் உத்தரவாதம்.

    நேரடியற்ற ஏற்றுமதியாளர்களின் வர்தத்க வங்கிகளுக்கான கொடுப்பனவின்மை மற்றும் கடன் தீர்க்க வகையின்மை இடர்களுக்கொதிராக காப்பிடுகின்றது.

     
  • ஏற்றுமதி செயலாற்றுகை உத்தரவாதம் (விலைமனு முறி, செயலாற்றுகை முறி)

    ஏற்றுமதியாளர்கள் முறிகளை வெற்றிபெறுவதற்கும் தமது உரிய செயலாற்றுகையினை இயலச் செய்வதற்கும் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்படுகின்ற எதிர் உத்தரவாதமாகும்.

     
  • ATA கார்னேற் காப்பிடுகின்ற ஏற்றுமதி செயலாற்றுகை உத்தரவாதம்

    வர்தத்கச் சந்தைகள் மற்றும் கண்காட்சிகளுக்கு பெறுமதிமிக்க பொருட்களின் தற்காலிக ஏற்றுமதியினை வசதிப்படுத்துகின்றது. இலங்கையின் சர்வதேச வர்த்தக சம்மேளனத்திற்கு வழங்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இறக்குமதித் தீர்வை கொடுப்பனவு இன்மையினை காப்பிடுகின்றது.

    100% கோரிக்கை உத்தரவாதம்

  • பொருட்கள் அனுப்புவோருக்கான ஏற்றுமதிச் செயலாற்றுகை உத்தரவாதம்.

    விமான நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெறுவதற்கு பொருட்கள் அனுப்புவோரை இயலச்செய்கின்ற வர்த்தக வங்கிகளுக்கான எதிர் உத்தரவாதமாகும். வங்கி ஒன்றிற்கான கோரிக்கை எதிர் உத்தரவாதத்தின் மீது 85% பொருட்கள் அனுப்புவோரின் விமான நிறுவன கொடுப்பனவற்ற கட்டணங்கள்.

  • பயணச் செலவினைக் காப்பிடுகின்ற மொத்த புரள்வு வங்கி உத்தரவாதம்

    இவ் உத்தரவாதமானது இலங்கை குடிபெயர் தொழிலாளர்கள் புறப்படுகைக்கு முந்திய கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியளிக்கின்றது.

     

FaLang translation system by Faboba