உரிய திகதி
உரிய திகதி என்பது ஒப்பந்தத்தின் நியதிகளில் வழங்கப்பட்ட அன்றிலிருந்து ஏதேனும் நீடிப்புகள் உள்ளடங்களாக ஏற்றுமதியாளருக்கு கொள்வனவாளரினால் கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய மொத்த விலைப்பட்டியல் பெறுமதி செலுத்தப்பட வேண்டிய திகதியாகும்.
விற்பனை ஒப்பந்தம்
விற்பனை ஒப்பந்தம் என்பது ஏற்றுமதியாளரினால் அவரது கொள்வனவாளருக்கு பொருட்களை அனுப்புவதற்காக அல்லது சேவைகளை வழங்குவதற்காக சட்ட ரீதியாக பிணிக்கின்ற அத்துடன் அமுல்படுத்தக்கூடிய உடன்படிக்கையொன்றாகும்.
இணைக் கொள்வனவாளர்
நேரடியாக அல்லது நேரடியற்று தனது முகாமைத்துவத்தின் மீது ஏற்றுமதியாளர் கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்ற,
- ஏற்றுமதியாளரும் கொள்வனவாளரும் அதே குழுமத்தின் பாகமாக இருக்கின்ற அல்லது ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சபைப் பணிப்பாளர்களை பகிர்ந்து கொள்கின்ற,
- ஏற்றுமதியாளரும் வாங்குபவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவராகவிருக்கின்ற,
- விடத்து எவரேனும் கொள்வனவாளர் எனப் பொருள்படும்
மொத்த விலைப்பட்டியல் பெறுமதி
விற்பனை ஒப்பந்த நியதிகளுக்கமைய உமக்கு கொள்வனவாளரினால் செலுத்த வேண்டிய அத்துடன் செலுத்தத்தக்க விலைப்பட்டியலின் மொத்தப் பெறுமதி என பொருள்படும்.
முன்மொழிவு
ஒப்பந்த விநியோகிப்பதற்கு முன்னர் நீர் (ஏற்றுமதியாளர்) சமர்ப்பிக்க வேண்டிய முறையாக பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிவு விண்ணப்பப்படிவம் மற்றும் அதனோடு இணைந்த எவையேனும் மேலதிகத் தகவல்கள்
ஒப்பந்தம்
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் காப்புறுதி பெறுநர் ஆகியோருக்கிடையிலான கடன் காப்புறுதி ஒப்பந்தம்
வர்த்தக ரீதியிலான இடர்கள்
கொள்வனவாளரின் கடன் தீர்க்க வகையற்ற நிலை
- அல்லது
- கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு கொள்வனவாளர் தவறுதல் அல்லது மறுத்தல்
- பொருட்களை அல்லது சேவைகளை ஏற்றுக் கொள்வதற்கு கொள்வனவாளர் தவறுதல் அல்லது மறுத்தல் போன்ற நிகழ்வுகளின் காரணமாக கடன்படுநர் தனது படுகடனை கொடுப்பனவு செய்ய முடியாதிருக்கின்ற இடர்
காலங்கடந்த தவறுதல்கள்
உமது (ஏற்றுமதியாளர்) வேண்டுதலுக்கு மத்தியிலும் 4 மாத காலத்தினுள் விலைப்பட்டியல் பெறுமதியினை அல்லது அதன் பகுதியினை கொடுப்பனவு செய்வதற்கு கொள்வனவாளர் தவறுதல் அல்லது மறுத்தல்
கொள்வனவாளரின் கடன் தீர்க்க வகையற்ற நிலை
தகுதியுடைய நீதிமன்றமொன்றினால் கொள்வனவாளர் கடன் தீர்க்க வகையற்றவர் என பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற போது,
- பொதுவாக அவரது கடன் கொடுநர்களின் நலனுக்காக கொள்வனவாளரினால் உடன்படிக்கையொன்று, படுகடனை மீள்கட்டமைப்பதற்கான ஒழுங்கொன்று அல்லது ஏற்பாடு ஒழுங்கமைப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போது,
- கொள்வனவாளரின் விவகாரங்களை முகாமை செய்வதற்கு தகுதி வாய்ந்த நீதிமன்றமொன்றினால் பெறுநர் அல்லது முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்ற போது,
- கொள்வனவாளர் முடிவுறுத்தப்படுவதற்கான கட்டளையொன்று ஆக்கப்பட்டிருக்கின்ற போது,
- கொள்வனவாளர் சொந்த விருப்பின் பேரில் முடிவுறுத்தப்படுவதற்கு செயலாற்றல்மிக்க தீர்மானமொன்று ஆக்கப்படுகின்ற போதுஇ ஆயினும் அத்தகைய தீர்மானம் வெறுமனே மீள்கட்டமைத்தல் அல்லது ஒன்றிணைத்தல் நோக்கத்திற்காக அல்லாதது.
- அனைத்து கடன் கொடுநர்கள் மீதும் பிணிக்கின்ற ஒழுங்கொன்றினை நீதிமன்றமொன்று அங்கீகரித்துள்ளபோது,
- காணப்படின் இவ்வொப்பந்தத்தின் நோக்கத்திற்காக கொள்வனவாளர் கடன் தீர்க்க வகையற்றவராக கொள்ளப்படுதல் வேண்டும்.
- மேலே (அ) தொடக்கம் (ஊ) வரை உள்ளவற்றுக்கு சமமான எமது தனியான அபிப்பிராயத்தில் காண்கின்ற ஏதேனும் வேறு சூழ்நிலைகள்.
ஒப்பந்தத்தினை ஏற்க மறுத்தல்
விற்பனை ஒப்பந்தத்தின் நியதிகளுக்கமைய பொருட்களை அல்லது சேவைகளை ஏற்றுக் கொள்வதற்கு கொள்வனவாளர் மறுத்தல் அல்லது தவறுதல்
அரசியல் இடர்கள் (நாட்டு இடர் / வர்த்தக ரீதியற்ற இடர்கள்)
தனியான கொள்வனவாளரின் நோக்கெல்லைக்கப்பால் அல்லது தனியான கொள்வனவாளரின் பொறுப்பிற்கு வெளியில் வருகின்ற இடர்கள். அவை;
- கொள்வனவு செய்பவரின் நாட்டில் பகைமை, யுத்தங்கள், கலகம், சிவில் மற்றும் அரசியல் பிரச்சினைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுதல்.
- கொள்வனவாளரின் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் திடீர்யுத்தம் தோன்றுதல்.
- கொள்வனவாளரின் நாட்டின் அரசாங்கத்தினால் அல்லது ஊடாக கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டிய மூன்றாவது நாட்டின் மூலம் கடனை காலம் தாழ்த்தி தீர்ப்பதற்கான சட்ட இசைவுப் பொது பிரகடனம்.
- கொள்வனவு செய்பவரின் நாட்டில் சட்டங்களில் மாற்றம் அத்துடன் / அல்லது இறக்குமதித் தடை
- இலங்கைக்கு கொடுப்பனவுகளை அனுப்புவதனை தடுக்கின்ற அல்லது தாமதப்படுத்துகின்ற கொள்வனவு செய்பவரின் நாட்டில் அல்லது ஊடான பணம் அனுப்பப் பட வேண்டிய மூன்றாவது நாடொன்றில் தோன்றுகின்ற அரசியல் நிகழ்வுகள் அல்லது பொருளாதார கெடுபிடிகள்.
- கொள்வனவு செய்பவர் வெளிநாட்டு அரசாங்கமொன்றாக அல்லது செயலாற்றுகை வெளிநாட்டு அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்த போதிலும் கொள்வன செய்பவர் ஒப்பந்த நியதிகளை நிறைவேற்றத் தவறுதல் அல்லது மறுத்தல்
- இலங்கைக்கு வெளியில் இடையூறுகள் அல்லது கப்பற்பயணம் திசைதிருப்படல் மூலம் கொள்வனவு செய்பவரிடமிருந்து மீள அறவிடப்பட முடியாத ஏதேனும் கையாளுதல், போக்குவரத்து அல்லது காப்புறுதி கட்டணங்களின் விளைவாக இலங்கையிலிருந்து கப்பலில் அனுப்பப்பட்ட பொருட்கள் தொடர்பில் ஏற்பட்ட செலவு.
- இலங்கைக்கு வெளியில் நிகழ்கின்ற நிகழ்வொன்றிலிருந்த தோன்றுகின்ற பொருட்கள் அல்லது சேவைகளின் தன்மையில் உடபொதிந்திருக்காக அத்துடன் உமது அல்லது உமது கொள்வனவாளரின் கட்டுப்பாட்டிற்குட்படாத, ஏதேனும் வேறு காரணம்.
கடன் வரையறை
ஐக்கிய அமெரிக்க டொலரில் இல்லது இலங்கை ரூபாவில் கொள்வனவு செய்பவரொருவரின் மீது இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படும் கடன் வரையறை அறிவித்தலொன்றின் வாயிலாக ஏற்றுமதியாளருக்கு அறிவிக்கப்பட்ட தொகை.
அதிகூடிய பொறுப்பு வரையறை
ஏதேனும் பஞ்சாங்க ஆண்டொன்றில் விற்பவரின் இடர் காப்புறுதி (ஏற்றுமதி காப்புறுதி ஒப்பந்தம்) ஒப்பந்த்தின் கீழ் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மொத்த பொறுப்புத் தொகை.
விற்பனை ஒப்பந்தம்
பொருட்களை அனுப்புவதற்காக அல்லது சேவைகளை வழங்குவதற்காக ஏற்றுமதியாளர்களையும் கொள்வனவாயர்களையும் சட்டரீதியாக பிணைக்கின்ற செயற்படுத்தத்தக்க உடன்படிக்கை.
கடன் காப்புறுதி (வரையறைக் காப்புறுதி)
கடன் வரையறையொன்றை நிர்ணயிப்பதற்கு முன்னர் கொள்வனவளர் தொர்புபட்ட நிலைத்திருத்தல், நிதி நிலைமை, தொடர்புபட்ட பல்வேறு ஏனைய காரணிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மூலமான மதிப்பீட்டுச் செயன்முறை.
கட்டுப்பணம்
இடர் காப்பீட்டுக்கான பரிமாற்றமாக காப்புறுதி பெறுநரினால் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவு செய்கின்ற தொகை.
தவணை கடந்த நிலுவை அறிவித்தல்
உரிய திகதியன்று விலைப்பட்டியலின் மொத்த பெறுமதியினை கொள்வனவாளர் உமக்கு கொடுப்பனவு செய்ய தவறுகின்ற போது, உரிய திகதியின் 30 நாட்களினுள் குறித்துரைத்த படிவத்தில் (படிவம் இல. 505) தவணை கடந்த நிலுவை பிரகடனமொன்றை எமக்கு சமர்ப்பித்தல் வேண்டும்
தவறிழைத்தோர் பட்டியல்/தவணை தவறிய கொள்வனவாளர்கள்
தவணை தவறிய கொள்வனவாளர்கள் மீதும் உரிமைக் கோரிக்கையொன்று கொடுப்பனவு செய்யப்பட்ட கொள்வனவாளர்கள் தொடர்பிலும் கடன் வரையறைகள் வழங்கப்படுவதில்லை.
காப்பீட்டை இடைநிறுத்தல்
ஓப்பந்தமொன்றின் கீழ் தவணை தவறுதல் ஒன்று அறிக்கையிடப்படுகின்ற போது, கொள்வனவாளர் மீதான காப்பீடு இடைநிறத்தப்படுகின்றது.
மீள அறவிடல்கள்
மீள அறவிடல்கள் என்பது பிணையங்கள், நட்டோத்தரவாதங்கள், உத்தரவாதங்கள், ஏதேனும் காப்புறுதி விடுவித்தல், நடவடிக்கை உரிமைகள், எதிர் கோரிக்கை அல்லது எதிரீடு அல்லது உம்மால் பிடித்து வைக்கப்பட்ட அணுகூலங்கள் அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொள்வனவாளரின் ஏதேனும் கடன்பட்ட தன்மையின் தொகையினைக் குறைக்கும் நோக்கத்திற்காக வேறுவகையில் கிடைக்கத்தக்கவை ஆகியவற்றிலிருந்து தேறக்கூடிய (கடன்தீர்க்க வகையற்ற நிலையொன்றுக்கு வெளியில் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படத்த தக்க பங்கிலாபங்கள் உள்ளடங்கலாக) பணத் தொகை எனப் பொருள்படும்.