இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஏற்றுமதிக் கடன் காப்புறுதியானது உமது வியாபாரத்தினை வளர்ப்பதற்கு நிம்மதியினையும் நம்பிக்கையினையும் உங்களுக்கு வழங்குகின்றது.
அனைத்து தொழிற்துறைகளிலும் காணப்படும் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய கம்பனிகளுக்காகவும் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப ஏற்றுமதி கடன் காப்புறுதியினை இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் வழங்குகின்றது. வெளிநாட்டு சந்தைகளில் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து கிடைக்கப்பெறும் ஏற்றுமதிக் கடன் காப்புறுதி உமக்கு உதவும். எமது ஏற்றுமதிக் கடன் காப்புறுதித் திட்டமானது (கொள்வனவாளர் இடர் காப்பீடு) தமது வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுக்கு பொருட்களை அனுப்புதல் அல்லது சேவைகளை வழங்குவதுடன் இணையப்பெற்ற வர்த்தகரீயான மற்றும் அரசியல்ரீதியான இடர்களின் காரணமாக கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாமை அல்லது தாமாக கிடைக்கின்றமை என்பவற்றுக்கெதிராக ஏற்றுமதியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது.
எமது காப்புறுதி ஒப்பந்தமானது ஏற்றுமதியாளர்கள் தமது கடன் படுநர்களின் பகுதியொன்றினை அல்லது தமது கடன் படுநர்களின் முழுத் தொகுதியினையும் காப்பீடு செய்வதற்கான தெரிவினை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகின்றது. அதேவேளை தெரிவு செய்யப்பட்ட நாடுகளைக் கொண்ட குழுவொன்றுக்கு அனுப்பப்படும் கப்பற் சரக்குகளை காப்பீடு செய்வதற்கான தெரிவினையும் எமது ஒப்பந்தங்கள் வழங்குகின்றன. எமது காப்புறுதிக் ஒப்ந்தங்களின் நெகிழ்வுத் தன்மையானது எமது சேவை நாடிகளினால் அதிகளவில் வேண்டப்படுகின்ற சௌகரியத்தினை வழங்குகின்றது. நட்டம் ஏற்படுவதற்கு முன்னர் சாத்தியமான கடன் இடர்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்குவதற்கு எமது காப்புறுதி பதவியினர் ஆழமான கடன் பகுப்பாய்வினை வழங்குகின்றனர்.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஏற்றுமதிக் கடன் காப்புறுதியானது உமது வியாபாரத்தினை வளர்ப்பதற்கு நிம்மதியினையும் நம்பிக்கையினையும் உங்களுக்கு வழங்குகின்றது
- பல நன்மைகள் காணப்படுகின்றன ஆனாலும் மிகவும் கண்கூடானது நிதியியல் ரீதியான பாதுகாப்பாகும். கடன் காப்புறுதியானது கடன் தீர்க்க வகையற்ற கம்பனிபனிகளின் செலுப்படாத படுகடன்களுக்கெதிராக காப்பீடளிக்கின்றது இதனால் கடன் காப்புறுதியானது கம்பனியின் காசுப்பாய்ச்சலினை பாதுகாக்கின்றது.
- கடன் காப்புறுதியன் பெறுமதியானது கடன் தீர்க்க வகையின்னையின் காரணமாக செலுத்தப்படாத படுகடன் காணப்படுகின்ற போது சாதாரணமாக உரிமைக் கோரிக்கைகளுக்கு கொடுப்பனவு வழங்குவதனையும் தாண்டிச் செயற்படுகின்றது. நாம் கடன் தகவல் சேவைகளை வழங்குகின்றோம். கடன் தகவல் சேவைகளானது வர்த்தக பங்காளிகள் பற்றிய தகவல்களை வழங்கி, கம்பனிக்கான கடன் முகாமைத்துவப் பிரிவொன்றாக செயற்படுகின்றன. இத்தகவல்களைக் கொண்டு கம்பனியொன்றுடன் வர்த்தகம் செய்வதா இல்லை என்பதனையும் கடன் வழங்குவதா இல்லையான என்பதனையும் கம்பனியொன்று தீர்மானிக்கலாம். உலகளாவிய ரீதியில் கம்பனிகள் பற்றிய சமகால நிதியியல் தகவல்களை வழங்குகின்ற இச்சேவை பெறுமதி மதிக்க முடியாதவொன்றானதாகும். எனவே தான், வாடிக்கையாளர்கள் நிதியியல் பிரச்சினைகளை அனுபவிக்க வேண்டிவருமா என்பதற்கு முன்கூட்டிய கடன் எச்சரிக்கை முறைமையொன்றினை வழங்கி வராக் கடன்களை தடுப்பதற்கு உதவுவதில் முதலிடம் வகிக்கின்றது. இது, வராக் கடன்களை தடுப்பதிலும் கடன் தீர்க்க வகையற்ற கொள்வனவாளர்களை தவிர்ப்பதற்கு கம்பனியினை இயலச் செய்தல் மாத்திரமின்றி தாமதமடைந்த கொடுப்பனவு இடர்களையும் குறைக்கின்றது. கடன் காப்புறுதியானது சாதாரண காசுப் பாய்ச்சலினை பாதுகாப்பதனைத் தாண்டி பல வகையான காரணங்களினால் மிகவும் மதிநுட்பம் வாய்ந்த உற்பத்தியொன்றாக தோற்றம் பெற்று வருகின்றது. இது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:
- ஐந்தொகைப் பாதுகாப்பு:
பல கம்பனிகள் இன்று ஐந்தொகைப் பாதுகாப்பு பற்றி அவதானம் செலுத்துகின்றன. தாய் கம்பனிக்கு அல்லது பங்குதாரர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய ஐந்தொகையில் பாதிப்பு ஏற்படுத்துகின்ற பாரிய நிகழ்வொன்று ஏற்படுவதற்கான சாத்தியம் பற்றி அவதானமொன்று காணப்படுகின்றது. கடன் காப்புறுதியானது கம்பனி தொடந்து இயங்குவதனையும் நிலைத்து வாழ்வதனையும் உறுதி செய்து கடும்பாதிப்புமிக்க வராக்கடன் நட்டங்களில் இருந்து கம்பனியினைப் பாதுகாக்கின்றது.
- சிறந்த கடன் கட்டுப்பாடு:
அநேகமான கம்பனிகள் கடன் கட்டுப்பாட்டினை ஒருங்கிணைக்கப்பட்ட முகாமைத்துவ தொழிற்பாடொன்றாகவும் இடர் முகாமைத்துவத்தின் பகுதியொன்றாகவும் காண்கின்றன. கடன் காப்புறுதியொன்று கடன் வரையறை சேவையொன்றினை அது கொண்டுள்ள போது, புதிய சந்தைகள், புதிய விநியோக மார்க்கங்கள் அல்லது புதிய சேவை நாடிகள் பற்றிய தீர்மானமெடுக்கின்ற போது கம்பனியின் கடன் முகாமையாளருக்கு இது விலைமதிப்பற்ற உதவியினை வழங்குகின்றது.
- விற்பனை அதிகரித்தல்:
கடன் காப்புறுதியானது சிறப்பான கடன் நியதிகளை வழங்குவதற்கு ஏற்றுமதியாளர்களை இயலச் செய்வதன் ஊடாக வர்த்தகத்தின் அளவினை அதிகரிக்ககூடியதுடன் இதன் மூலம் புதிய வியாபாரங்களையும் ஈட்டித் தரும். கடன் வரையறை சேவை பயன்படுத்தப்பட்டவுடன், கம்பனியொன்று நாணயக் கடிதங்களைக் அல்லது உடனடிக் கொடுப்பனவுகளைக் கோராது கொள்வனவாளரொருவருக்கு திறந்த கடன்களை வழங்க முடியும்.
- கப்பல் சரக்கு அனுப்பிய பின்னர் வங்கிகளிடமிருந்து நிதிக்கான இலகுவான அணுகுவழியொன்றினை ஒப்பந்தம் வழங்குவதனால் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் காப்புறுதியானது சிறந்த துணைப் பிணையமொன்றாக கருதப்படுகின்றது.
- ஐந்தொகைப் பாதுகாப்பு:
- கொள்வனவாளர் இடர் காப்புறுதி ஒப்பந்தம் - மொத்தப் புரள்வு – அனைத்து கொள்வனவாளர்களும்
வர்த்தகரீதியான மற்றும் அரசியல்ரீதியான இடர்களிலிருந்து ஏற்றுமதியாளரை பாதுகாப்பதற்கான காப்புறுதி. இதன் கீழ் பிற்போடப்பட்ட கொடுப்பனவு நியதிகள் மீதான மொத்த கப்பற் சரக்கிற்கும் நாம் காப்பீடு வழங்குகின்றோம்.
- விற்பவர் இடர் காப்புறுதி ஒப்ந்தம் -கொள்வனவாளர் குறித்தது
ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்பான கொள்வனவாளர்களின் வர்த்தகரீதியான இடர்களில் மற்றும் அரசியல்ரீதியான இடர்களில் இருந்து ஏற்றுமதியாளரை பாதுகாப்பதற்கான காப்புறுதி.
- விற்பவர் இடர் காப்புறுதிக் ஒப்பந்தம் - நாடு குறித்தது
குறித்த நாடு ஒன்றின் வர்த்தகரீதியான இடர்களில் மற்றும் அரசியல்ரீதியான இடர்களில் இருந்து ஏற்றுமதியாளரை பாதுகாப்பதற்கான காப்புறுதி.
- விற்பவர் இடர் காப்புறுதி ஒப்பந்தம் - அரசியல்ரீதியான இடர்
குறித்த நாடு ஒன்றின் அரசியல் இடர்களில் இருந்து ஏற்றுமதியாளரைப் பாதுகாப்பதற்கான காப்புறுதி
- விற்பவர் இடர் காப்புறுதி ஒப்பந்தம் - உலகலாவிய காப்பீடு
இலங்கையில் வதிவிடத்தை கொண்டுள்ள வெளிநாட்டு ஏற்றுமதி கம்பனிகளுக்காக வழங்கப்படுகின்ற காப்புறுதியாகும்.
- விற்பவர் இடர் காப்புறுதி ஒப்பந்தம் - துணை கம்பனி இடர்கள்
இலங்கையில் தாய்க் கம்பனியை கொண்டுள்ள வேறு ஒரு நாட்டில் அமையப்பெற்றுள்ள துணைக்கம்பனி ஒன்றின் ஏற்றுமதியாளர்களின் இடர்களை காப்பிடுகின்றது.
- விற்பவர் இடர் காப்புறுதி ஒப்பந்தம் - இறுதியாக வாங்குபவர்களை காப்பிடுகின்றது
வாங்குபவரின் நாட்டில் உள்ள முழுமையாக உரித்தான துணை கம்பனி ஒன்றுக்கு கப்பல் சரக்குகள் அனுப்பப்படுகின்ற போது இறுதியாக வாங்குபவர்களின் வர்த்தகரீதியான மற்றும் அரசியல்ரீதியான இடர்களை காப்பிடுகின்ற இலங்கை ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பதற்கான காப்புறுதி.
- விற்பனையாளர் இடர் காப்புறுதிக் ஒப்பந்தம் - கையிருப்பு அனுப்புச் சரக்கு
கையிருப்பு அனுப்புச் சரக்குகளின் வர்தகரீதியான இடர்கள், அரசியல்ரீதியான இடர்கள் மீது இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீடு வழங்குகின்றது.
- விற்பனையாளர் இடர் காப்புறுதிக் ஒப்பந்தம் - நுழைவுத் துறைமுக (Entrepot) வர்த்தகம்
நுழைவுத் துறைமுக (Enntrepot) வர்த்தகத்தில் இருந்து தோன்றுகின்ற வர்த்கரீதியான இடர்கள் மற்றும் அரசியல்ரீதியான இடர்களில் இருந்து இலங்கை ஏற்றுமதியாளரை காப்பிடுகின்றது.
- விற்பனையாளர் இடர் காப்புறுதிக் ஒப்பந்தம் - விற்பனையாளர் இடர் அனைத்தையும் உள்ளடக்கிய சேவை ஒப்பந்தம்
சேவை துறை ஏற்றுமதியாளர்களை வர்த்கரீதியான இடர்கள் மற்றும் அரசியல்ரீதியான இடர்களில் இருந்து காப்பதற்கான காப்புறுதி.
- விற்பனையாளர் இடர் காப்புறுதி ஒப்பந்தம் - உள்நாட்டு கடன் காப்புறுதி
இலங்கையில் உள்ள தமது கொள்வனவாளர்களுக்கு பொருட்களை அனுப்புதல் சேவை வழங்குதல் ஆகியவற்றுடன் இணையப்பபெற்ற வர்த்தக இடர்களில் இருந்து காப்புறுதி பெறுநரை பாதுகாப்தற்கான காப்புறுதி
பொருட்களை அனுப்புதல், சேவை வழங்குதல் போன்றவற்றுடன் இணைப்பெற்ற வர்த்தகரீதியான அதேபோன்று வர்தகரீதியற்ற இடர்களின் காரணமாக கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாமை அல்லது தாமதமான கொடுப்பனவுகளுக்கு எதிராக விற்பவர் இடர் காப்புறுதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதியானர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குகின்றோம்.
- வர்த்தக இடர்கள் (கொள்வனவாளர் இடர்கள்)
இதன் கீழ் பின்வரும் காரணங்களினால் கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை மற்றும் தாமதமாக கொடுப்பனவு கிடைக்கப் பெறுதலுடன் தொடர்புடைய இடர்களை நாம் காப்பிடுகின்றோம்.
- கொள்வனவாளரின் கடன்தீர்க்க வகையற்ற தன்மை
- காலங்கடந்த தவணை தவறுதல்
உரிய திகதியின் நான்கு மாதங்களினுள் மொத்த விலைப்பட்டியல் பெறுமதியினை அல்லது அதன் பகுதி ஒன்றினை கொடுப்பனவு செய்வதற்கு கொள்வனவாளர் தவறுதல் அல்லது மறுத்தல்
- ஒப்பந்தத்தத்தை மறுத்தல் (கொள்வனவாளரினால் ஏற்றுக்கொள்ளப்படாமை)
விற்பனை ஒப்பந்த நியதிகளுக்கு அமைய பொருட்களை அல்லது சேவைகளை ஏற்றுக்கொள்வதற்கு கொள்வனவாளர் தவறுதல் அல்லது மறுத்தல்.
- வர்த்தக ரீதியாற்ற இடர்கள் (அரசியல் இடர்கள்/நாட்டு இடர்கள்)
இதன் கீழ் பின்வரும் காரணங்களினால் கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை மற்றும் கொடுப்பனவுகள் தாமதமாக கிடைகின்ற இடர்களை நாம் காப்பிடுகின்றோம்.
- வாங்குபவரின் நாட்டில் பகைமை, யுத்தங்கள், கலகம், சிவில் மற்றும் அரசியல் பிரச்சினைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுதல்.
- கொள்வனவாளரின் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் திடீர் யுத்தம் தோன்றுதல்.
- கொள்வனவாளரின் நாட்டில் அரசாங்கத்தினால் அல்லது ஊடாக கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டிய மூன்றாவது நாட்டின் மூலம் கடனை காலம் தாழ்த்தி தீர்ப்பதற்கான சட்ட இசைவுப் பொது பிரகடனம்.
- வாங்குபவரின் நாட்டின் சட்டங்களில் மாற்றங்கள் அத்துடன் / அல்லது இறக்குமதி தடை
- இலங்கைக்கு கொடுப்பனவுகளை அனுப்புவதனை தடுக்கின்ற அல்லது தாமதிக்கின்ற வாங்குபவரின் நாட்டில் அல்லது ஊடாக கொடுப்பனவு அனுப்பப்ட வேண்டிய மூன்றாவது நாட்டில் தோன்றுகின்ற அரசியல் நிகழ்வுகள் அல்லது பொருளாதாரக் கெடுபிடிகள்.
- கொள்வனவாளர் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றாக அல்லது செயறலாற்றுகை உத்தரவாதம் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் அளிக்கப்பட்டு இருந்த போதிலும் நியதி ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு கொள்வனவாளர் தவறுதல் அல்லது மறுத்தல்.
- இலங்கைக்கு வெளியில் இடைத்தடங்கள் மூலம் அல்லது கடற்பயணத்தை திசைமாற்றுதல் மூலம் ஏதேனும் கையாளுதல், போக்குவரத்து அல்லது காப்புறுதி கட்டணங்கள் போன்றவற்றின் விளைவொன்றாக இலங்கையில் இருந்து கப்பலில் அனுப்பட்ட பொருட்கள் தொடர்பில் ஏற்பட்ட அத்துடன் கொள்வனவாளரிடம் இருந்து அறவிடப்படமுடியாத செலவு.
- பொருட்கள் சேவைகளின் தன்மையில் உள்ளார்ந்திருக்காத அல்லது உமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அல்லது இலங்கைக்கு வெளியில் நிகழுகின்ற நிகழ்வு ஒன்றில் இருந்து தோன்றுகின்ற உமது கொள்வனவாளரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஏதேனும் வேறு காரணம்.
உமது தேவைகள், அளவு அத்துடன் வியாபார நோக்கங்களை சார்ந்து வேண்டப்படும் காப்பீட்டினை 60% தொடக்கம் 90% வரை நீங்கள் தெரிவு செய்யலாம்.
- Western Europe
- Eastern Europe
- Middle East
- Asia
- Africa
- Pacific
- North America & Caribbean
- Central & South America
உமது வேண்டுதலின் பேரில் மதிப்பீடொன்றிற்கு பின்னர் மேற்குறிப்பிடப்படாத நாடொன்றில் உள்ள கொள்வனவாளர் ஒருவருக்கான காப்பீட்டினை வழங்குவதற்கு நாம் கருத்திற் கொள்வோம்.