இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் பற்றிய நற்சான்றிதழ்கள்
கடன் இடருக்கு எதிரான காப்புறுதிக்காக 10 வருடங்களுக்கும் மேல் நாம் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து பணியாற்றி வருவது பற்றி குறிப்பிடுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஏற்றுமதிக் கடனுக்கான ஒப்பந்தங்களை உருவாக்குவதில் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான ஆதரவு, நெகிழ்வுத் தன்மை மற்றும் சாதகமான எண்ணப்பாங்கு என்பவற்றுக்கு நன்றி கூறுவதற்கான வாய்ப்பாக இத்தருணத்தினை எடுத்துக் கொள்கின்றோம். இன்று 2வது பாரிய ஏற்றுமதியாளராக எமது வெற்றிப் பயணத்தில் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பங்களிப்பினைப் பெற்றிருப்பதில் நாம் உண்மையாக நன்றி கூறுகின்றோம். அத்துடன் தமது ஏற்றுமதி வர்த்தகத்தினை விஸ்தரிப்பதற்கு விரும்புகின்ற எந்த ஏற்றுமதியாளருக்கும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் சிறந்த பங்காளியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
|