அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
பொருட்களை அனுப்புதலுடன் அல்லது சேவை வழங்குவதுடன் இணையப் பெற்ற வர்த்தகரீதியான மற்றும் அரசியல்ரீதியான இடர்களின் காரணமாக கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாமை அல்லது தாமதமான கொடுப்பனவுகள் என்பவற்றுக்கெதிராக உமது வியாபாரதத்திற்கு பாதுகாப்பு வழங்குகின்ற காப்புறுதி காப்பீடாகும்.
கப்பற் சரக்கினை அனுப்புவதற்கு நான் திட்டமிருகின்ற கொள்வனவாளருக்கான செல்லுபடியான கடன் வரையறையொன்றுடன் கூடிய விற்பவர் இடர் காப்புறுதி ஒப்பந்தமொன்றினை நான் வைத்திருக்கின்றேன். எனக்கு பாதுகாப்பானதா?
ஆம், ஒவ்வொரு கப்பல் சரக்கு தொடர்பிலும் பிரகடனமொன்றுடன் சேர்த்து உரிய காலத்தில் நீர் தொடர்புடைய கட்டுப்பணத்தினை செலுத்தி இருப்பீராயின்.
உரிய நிதியியல் அல்லது உரிய திகதிக்கு உடனடியாக முன்னர் உமது தற்றுணிவின் பேரில் 30 நாட்கள் வரை நீடிப்புக் காலம் வழங்கலாம். அத்துடன் அன்றிலிருந்து (thereof) 14 நாட்களினுள் அத்தகைய நீடிப்பு பற்றி எமக்கு அறவிக்க வேண்டும். 30 நாட்களை தாண்டிய ஏதேனும் நீடிப்புகளுக்கு எமது அனுமதி தேவை.
உரிய திகதியன்று அல்லது அதற்கு முன்னர் விலைப்பட்டியலின் மொத்தப் பெறுமதியினை கொடுப்பனவு செய்வதற்கு வாங்குபவர் தவறுகின்ற நிகழ்வின்போது, உரிய திகதியின் 30 நாட்களினுள் நிலுவை கொடுப்பனவுகள் பற்றிய பிரகடனமொன்றினை (குறித்துரைக்கப்பட்ட படிவத்தில்) ஏற்றுமதியாளர் எமக்கு சமர்ப்பிக்கலாம்.
வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக ரீதியற்ற இடர்களின் காரணமாக கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாமை அல்லது கிடைப்பதற்கு தாமதமடைதல் என்பவற்றின் விளைவாக கொடுப்பனவு செய்யப்படாது எஞ்சியிருக்கின்ற ஏதேனும் விலைப்பட்டியலின் அல்லது நிலுவையின் உடன்பட்ட வீதமொன்றினை ஒப்பந்தமொன்று கொடுப்பனவு செய்கின்றது.
உரிய திகதியின் 12 மாதங்களினுள் குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் உரிமைக் கோரிக்கையொன்றை நீர் மேற்கொள்ளலாம். அத்தகைய கோரிக்கைகள் பின்வரும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின்வருவனவற்றின் காரணமாக இழப்பு ஏற்பட்டு இருக்கின்ற போது:
- வாங்குபவர் கடன் தீர்ப்தற்கு வகையற்ற நிலை:
கடன் தீர்ப்தற்கு வகையற்ற நிலை ஏற்படுகின்ற திகதியின் பின்னர் உடனடியாக அல்லது உரிய திகதியின் நான்கு மாதங்களுக்கு பின்னர் எது முந்தியதோ அது.
- காலங்கடந்த தவணை தவறுதல்கள் :
உரிய திகதியிலிருந்து 4 மாதங்களுக்கு பின்னர்
- ஏற்றுக் கொள்ளாமை (ஒப்பந்தத்தை நிராகரித்தல்) :
மீள் விற்பனையின் பின்னர் உடனடியாக அல்லது உரிய திகதியின் ஒரு மாதத்திற்கு பின்னர்
- வர்த்தக ரீதியற்ற இடர்கள் :
உரிய திகதியின் நான்கு மாதங்களுக்குப் பின்னர்
உரிமைக் கோரிக்கையொன்று வெற்றியடையாமல் இருப்பதற்கான மிகவும் பொதுவான காரணமாக காணப்படுவது குறித்துரைத்த கால அளவுத்திட்டத்தினுள் கொடுப்பனவு கிடைக்கப் பெறாமை பற்றி காப்பிடுநருக்கு அறிவிக்கத் தவறுவதாகும். ஏதேனும் காப்புறுதிகளுக்குப்போன்று நீங்கள் நேர்மையாக இருப்பதற்கும் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றீர்.
நட்டோத்தரவாத மட்டமானது பொதுவாக 60% - 90% இற்கு இடைப்பட்டதாகும். எனினும், நீர் தெரிவு செய்கின்ற ஒப்பந்தம் உமது கடன் முகாமைத்துவ அனுபவம், உமது கிடைப்பனவுக் கணக்குகள், கொடுப்பனவு நியதிகள் மற்றும் உமது கட்டுப்பண இலக்கு என்பவற்றைப் பொறுத்து இம் மட்டம் மாறுபடுகின்றது.
வேண்டப்படும் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் பொதுவாக, 4 தொடக்கம் 6 வாரங்களினுள் உரிமைக் கோரிக்கைக்கு பணம் வழங்கப்படும்.
ஆம், சேவைகளுக்கான கொள்வனவாளர் இடரின் கீழ் மென்பொருள், நிர்மாணம் போன்ற சேவை ஏற்றுமதியாளர்கள், வழங்கப்படும் சேவைகளில் உள்ள கடன் இடர்களை காப்பிட முடியும்.
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கடன் காப்புறுதியானது இலாபத் தன்மையினை தக்கவைத்து பாதுகாப்புமிக்க வளர்ச்சிக்கு ஆதாரத்தினை வழங்குகின்ற அதேவேளை வராக்கடன் சுமையினை குறைத்து கஷ்டப்பட்டு ஈட்டிய வெற்றியினைப் பாதுகாக்கவும் உதவுகின்றது. உம்மிடம் கொள்வனவு செய்பவரின் நிதியியல் நல்வாழ்வு உள்ளடங்கலாக ஒவ்வொரு விடயத்திலும் நிகழ்கின்ற நிச்சயமற்ற தன்மையின் விதத்தினையும் பாதுகாப்பதற்கான தெரிவின் மூலம் வசதிமிக்க வலையமொன்றினை தோற்றுவிப்பதற்கு இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் எப்போதும் பணியாற்றுகின்றது.
பின்வருவன ஏனைய நலன்களாகும்
- அதிகூடிய காப்பிடு
- ஒப்பந்தம், வர்த்தக வங்கிகளினால் துணை பிணையமொன்றாக கொள்ளப்படுகின்றது.
- வெளிநாடுகளில் புதிய சந்தைகளினுள் நுழைவதற்கும் புதிய கொள்வனவாளர்களை தேடுவதற்கும் உமக்கு இயலுமாகவிருக்கம்.
- உமது கொள்வனவாளரின் நிதியியல் நிலைமையினை மதிப்பீடு செய்து கண்காணிக்கின்றோம்.
- வங்கிகள், வழங்குநர்கள் மற்றும் ஏனைய வர்தகப் பங்காளிகள் பார்வையில் உமது வியாபார கடன் தரப்படுத்தல் அதிகரிக்கப்படுகின்றது.
- வசதியானது
- உமது தேவைக்கேற்ப வடிவமைக்கப்படுகின்றது
வர்த்தகத்தின் அளவு அல்லது துறை போன்றவற்றை கருத்திற் கொள்ளாது தமது கொள்வனவாளர்களுடன் கடன் நியதிகளில் வர்த்தகம் செய்கின்ற போது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் வர்த்தக ரீதியான மற்றும் அரசியல் ரீதியான இடர்களுக்கு முகங்கொடுக்கின்றன. O/A, D/A, D/P, CAD, ஆவணங்களின் பிரதி அல்லது நாணயக்கடிதம் போன்ற எவ்வடிவில் கொடுப்பனவு நியதிகள் இருந்த போதிலும் இடர் காணப்படுகின்றது. எனவே, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தொடக்கம் பாரிய பல் தேசியக் கம்பனிகள் வரை அனைத்து அளவுகளிலும் உள்ள கம்பனிகளும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கடன் காப்புறுதி வசதியினைப் பயன்படுத்துகின்றன.
- நாணயக் கடிதம் (L/C)):
நாயணக் கடிதத்தின் நியதிகளுடனும் நிபந்தனைகளுடன் இணங்குகின்ற விதந்துரைக்கப்பட்ட ஆவணங்களின் சமர்ப்பணத்தின் மீது சொல்லப்பட்ட தொகையொன்றினை பயனாளிக்கு கொடுப்பனவு செய்வதற்கு நாணயக் கடிதத்தினை விநியோகிக்கும் வங்கியொன்றின் மூலமான (விநியோக வங்கி) பொறுப்பேற்றல் ஒன்றாகும்.
இணையப்பெற்ற இடர்கள்: வர்த்தக ரீதியற்ற இடர்கள் - கொடுப்பனவுக்கு எதிரான ஆவணங்கள் (D/P):
ஆவணங்களை கையாளுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள வங்கியின் மூலமான வரைபுகளுக்கான கொடுப்பனவினைப் பெற்றதன் பின்னர் பொருட்களின் உடமையினை பெறுவதற்கு கொள்வனவாளர் ஒருவரினால் வேண்டப்படும் ஆவணங்களை ஒப்படைக்கும் செயன்முறையாகும்.
இணையப்பெற்ற இடர்கள் : வர்த்தக மற்றும் அரசியல் இடர்கள் - ஆவணங்களுக்கெதிரான பணம் (CAD):
வரைவு ஒன்றினை ஈடுபடுத்தாது ஆவணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற கொடுப்பனவுடன் கூடிய கொடுப்பனவிற்கு எதிரான (D/P) ஆவணங்களையொத்த செயன்முறையொன்றாகும்.
இணையப்பெற்ற இடர்கள் : வர்த்தக ரீதியான மற்றும் வர்த்தக ரீதியற்ற இடர்கள் - ஏற்றுக்கொள்ளலுக்கு எதிரான ஆவணங்கள் (D/A):
ஆவணங்களை கையாளுவதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள வங்கியொன்றின் மூலமான வரைவுகளின் ஏற்றுக்கொள்ளல் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பொருட்களின் உடமையினை பெறுவதற்கு கொள்வனவாளர் ஒருவர் மூலமாக வேண்டப்படுகின்ற ஆவணங்களை ஒப்படைக்கும் செயன்முறை.
இணையப்பெற்ற இடர்கள் : வர்த்தக ரீதியான மற்றும் அரசியல் ரீதியான இடர்கள் - திறந்த கணக்கு (O/A)
விற்பனை ஒப்பந்தம் தவிர ஏதேனும் குறித்த கடன்பட்ட தன்மை பற்றி ஆவணத்தினால் ஆதரவளிக்கப்படாத, பொருட்களுக்கான கொடுப்பனவினை மேற்கொள்வதற்கு கொள்வனவாளர் ஒருவருக்கான கடன் காலமொன்றினை விற்பனையாளர் ஒருவர் நீடிக்கின்ற நடைமுறையாகும்.
இணையப்பெற்ற இடர்கள் : வர்த்தக ரீதியான மற்றும் வர்த்தக ரீதியற்ற இடர்கள்
சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கலின் சுமார் 80% ஆனவை கடன் நியதிகளின் அடிப்படையில் நிகழ்கின்றன. கம்பனியொன்றின் சொத்துகளின் 40% ஆனவை வர்த்தக படுகடன்கள் வடிவில் காணப்படுகின்றன. சில சமயங்களில் இவ் அளவு மிக அதிகமாகவிருக்கலாம். எச்சேவை நாடி கொடுப்பனவினை மேற்கொள்வதற்கு தவறுவார் என எதிர்வு கூறுவது கம்பனியொன்று மிக கடினமாதாகும். ஸ்திரமாக விருக்கின்ற அத்துடன் நீண்டகால உறவினை தாபித்துள்ள கௌ;வனவாளர்களிடமிருந்தே கிட்டத்தட்ட 50% மான கொடுப்பனவு மேற்கொள்வதற்கான தவறுதல்கள் தோன்றுகின்றன.
கொடுப்பனவு கிடைக்கப்பெறாத வியாபாரத்திற்கான செலவு கணிசமானதாகும். உதாரணமாக, கம்பனியொன்றின் இலாப அளவு 5% ஆகவிருப்பின் அதன் வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூபா. 200,000 படுகடனை செலுத்துவதற்கு தவறுவாராயின் இழந்த இலாபத்தினை உழைப்பதற்கு கம்பனி, ரூபா. 4,000,000 மேலதிக விற்பனையொன்றினை அடையப் பெற வேண்டியிருக்கும். மிக முக்கியமாக, காசுப் பாய்ச்சல் இழப்பு நாசப்படுத்தக்கூடியதாக இருக்கும். கொடுப்பனவின்மையானது உமது கம்பனியினை பலவீனமடையச் செய்வதுடன் அதன் முதலீட்டு கொள்ளளவில் வீழ்ச்சியடையச் செய்யும். ஏற்றுமதி கடன் காப்புறுதி ஒப்பந்தமொன்று கிடைப்பனவு கணக்குகளை முகாமை செய்வதில் உதவுவதுடன் கொடுப்பனவு கிடைக்கப் பெறாத நிகழ்வுகளில் நட்டஈடளிக்கும்.
கொள்வனவாளரொருவர் மீது இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்கின்ற அதிகூடிய தொகை. கடன் வரையறையின்றிஇ கொள்வனவாளரின் காலங்கடந்த தவணை தவறுதல்இ பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை, மற்றும் கடன் தீர்க்க வகையின்னை தொடர்பிலான இழப்புகள் காப்பிடப்படாது.
ஏற்புடைய கடன் வரையறை மதிப்பீட்டுக் கட்டணங்களுடன் படிவம் 502 இல் விண்ணப்பிக்கவும். கொள்வனவு செய்பவரின் கடன் பெறுவதற்கு 04-14 (அனைத்து விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதிகள் நீங்கலாக) நாட்கள் எடுக்கும்.
கொள்வனவாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்ற போது கடன் வரையறை விண்ணப்பத்தினை விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. செயன்முறையினை துரிதப்படுத்தும் பொருட்டு கொள்வனவாளர் பற்றி உங்களிடம் உள்ள ஏதேனும் தகவல்களை எமக்கு வழங்குங்கள்.
கொள்வனவாளரின் தொடர்பினை எமக்கு வழங்கி 502A ஆம் இலக்க படிவத்தில் அதிகரிப்பொன்றுக்கு விண்ணப்பிக்கவும்.
கடன் எல்லை என்பது சுழல் வரையறையொன்றாகும். இதனால், உமது கப்பற் சரக்கு பற்றி தொடர்ச்சியாக பிரகடனம் செய்வீர்களாயின் உமது ஒப்பந்தம் செயலில் உள்ள வரைக்கும் செல்லுபடியாகும். தொடர்ச்சியாக 12 மாத காலமொன்றிற்கு கப்பற் சரக்கு பற்றி பிரகடனம் செய்யாதிருப்பின் கடன் வரையறையானது தானாக இரத்தாகும்.