• Inner slider 1
இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் செயல்பங்கு

கொந்தளிப்புகளும் பொருளாதார நிச்சயமின்மையுமிக்க இக்காலகட்டத்தில் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கொள்கைகள், இதுவரை கப்பல் சென்றிருக்காத ஆள்புலங்களுக்கும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஊடுருவுவதற்கும் புதிய ஏற்றுமதிச் சந்தைகளை விருத்தி செய்வதற்கும் இயலச் செய்துள்ளது. நிச்சயமின்மை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களினால் முன்னர் அறிந்திருக்காத வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்வதற்கு பல ஏற்றுமதியாளர்கள் தயங்குகின்றனர். எனினும், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் காப்புறுதி ஒப்பந்தங்களுடன் கொடுப்பனவுகள் பற்றிக் கவலையடையாது புதிய வியாபாரங்களைக் கவருவதற்காக வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு ஏற்றுமதியாளர்கள் சௌகரியமாக கடன் வழங்க முடியும். இயற்கைச் சீற்றம் மற்றும் எதிர்பாராத பொருளாதார பின்னடைவு போன்றன நன்கு அறிந்த, நீண்ட காலமாக வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றவர்களிடமிருந்து கூட கொடுப்பனவுகளைப் பாதிக்கலாம். ஆனால் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து காப்புறுதி ஒப்பந்தமொன்றை பெற்றிருத்தலானது அத்தகைய அனைத்து தலைவலிகளையும் நீக்கிவிடும். எமது காப்புறுதி ஒப்பந்தங்கள், ஏற்றுமதியாளர்களை வங்கிகளுக்கு சிறந்த கடன் வாய்ப்புமிக்கவர்களாக்குவதுடன் கவர்ச்சிகரமான நியதிகளில் கடன் பெறுவதற்கும் அவர்களை இயலச் செய்கின்றது.

ரூபா 1.4 பில்லியன் கொண்ட பங்கு மூலதனத் தளத்துடனும் ரூபா 1 பில்லியன் பெறுமதியுடைய அரசாங்க உத்தரவாதத்தின் உதவியுடனும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனமானது எவ்வித புயல் வானிலைக்கும் எதிர்பாராத நெருக்கடியிலிருந்து ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பதற்கும் நிதியியல் ரீதியாக சிறப்பாக வளம் பெற்றுள்ளது. இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனமானது ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள உலகம் பூராகவும் 79 கம்பனிகளின் உறுப்புரிமையினைக் கொண்டுள்ள, 1934 இல் தாபிக்கப்பட்ட உலக கடன் மற்றும் காப்புறுதி காப்பீடளிப்பவர்களின் கூட்டமைப்பொன்றான, கௌரவமிக்க பெரனி யூனியன் அமைப்பின் உறுப்புரிமையினை பெற்றுள்ளது.

கடன் என்பது “வியாபாரத்தின் உயிர்நாடி” என விவரிக்கப்படுகின்றது

கம்பனியொன்றின் சொத்துகளின் பாரிய பங்கு அநேகமாக கடன்களில் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில் சராசரியாக கம்பனியொன்றின் சொத்துகளில் சுமார் 40% கடன்படுநர்களின் உரிமையில் காணப்படுகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கலானது சந்தையில் காணப்படும் ஏனையோருடன் போட்டியிடுகின்ற போது வர்த்தக கம்பனிகளுக்கு இன்றியமையாதவொன்றாகும். போட்டியானது விலையினைப் போன்று அதே அளவில் கடனையும் அடிப்படையாக கொண்டு இடம் பெறுகின்றது. இதற்கு காரணம் அநேகமான கம்பனிகளுக்கு காசுப் பாய்ச்சல் மிக முக்கியமானதாகும். கொள்வனவு மேற்கொள்ளப்படுகின்ற போது பணம் வெளியில் செல்வதுடன் விற்பனை நிகழும் வரை அல்லது சேவை வழங்கப்படும் வரை பணம் கம்பனிக்கு திரும்பி வருவதில்லை. இதன் விளைவாக, காசுப் பாய்ச்சல் அதிகரிப்பிற்கு உதவுவதற்காக கம்பனியொன்று எப்போதும் அதன் வழங்குநர்களிடமிருந்து கடன் காலமொன்றினை தேடுகின்றது. எவ்வாறாயினும், அவ்வழங்குநரின் காசுப்பாய்ச்சலினை இது சுயமாக பாதிக்கும். எனவே, கடன் என்பது சாதாரணமாக வியாபாரத் தேவைக்கு தீயது ஆனால் அவசியமானவொன்றாகும். இருந்த போதிலும், உரிய திகதியில் கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாதபோது பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. கொடுப்பனவுகள் தாமதமடைந்தால் அல்லது கிடைக்காது போகின்ற போது கம்பனி வருந்துவதுடன் வியாபாரத்தைவிட்டு வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. தாமதமான கொடுப்பனவுகள் என்பது வளர்ந்து வருகின்ற வர்த்தக இடரொன்றாகும். இது, கம்பனியின் நிதியினையும் ஐந்தொகையினையும் பாதிப்புக்குள்ளாக்குவது மாத்திரமின்றி ஆக்கபூர்வமான வேறு வழிகளில் செலவிடக்கூடிய கம்பனியின் காலத்தையும் மூலவளங்களையும் இல்லாதொழிக்கின்றது. கொள்வனவாளரொருவரின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை மேலும் கம்பனிகளை பாழாக்குகின்றது. அத்தகைய நிகழ்வொன்றின் போது ஏதேனும் படுகடைனை அல்லது அதன் கணிசமான பாகமொன்றினை மீள அறவிடுவதற்கு அல்லது படுகடன் பதிவழிப்புச் செய்யப்படுவதற்கு சாத்தியமிருக்கலாம்.

வராக்கடன்களின் தாக்கம் பிரதான வழங்குநரொருவருடன் தொடர்புபடுகின்ற போது அது நாசப்படுத்தும் ஒன்றாக அமையலாம்.

வராக்கடன்களும் தாக்கத்தினை கொண்டுள்ளன. வராக்கடன்களின் தாக்கமானது அதன் அளவின் அனைத்து பாகங்களிலும் வளரக்கூடியது. கம்பனியொன்று குறைந்த எண்ணிக்கையிலான கொள்வனவாளர்களை மாத்திரம் கொண்டுள்ளபோது பிரச்சினை மோசமடையலாம்.

வாய்ப்பான கொள்வனவாளர் ஒருவர் பற்றி சகலதையும் அறிவது கம்பனிகளுக்கு இலகுவானதல்ல

கணக்குகளுக்கு அமைவாக நிதியியல் ரீதியாக ஆரோக்கியமிக்கதாக தோன்றுகின்ற அத்துடன் சிறப்பான முகாமைத்துவத்தினை கொண்டுள்ளது எனத் தோன்றுகின்ற கம்பனியொன்று பலர் வியப்பது போன்று ஒரு வேளை கடன் தீர்ப்தற்கு வகையற்ற நிலைக்கு வரலாம். ஐக்கிய அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற விருத்தியடைந்த நாடுகளிலும் பிராந்தியங்களிலும் தமது அனைத்து வர்த்தகப் பங்காளிகளும் அமையப் பெற்றுள்ளதனால் தவறான முகாமைத்துவத்தின் காரணமாக தாம் கடன் தீர்ப்தற்கு வகையற்ற நிலையினால் பாதிக்கப்பட மாட்டோம் என பல கம்பனிகள் நம்புகின்றன. தற்கால கம்பனிகள் வழங்குநர்களிடமிருந்தான பிரச்சினைகளை மறைப்பதில் மிகவும் திறமை பெற்று விளங்குகின்றன. ஆனால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் வர்த்தகம் செய்பவர்கள் மாத்திரம் கொடுப்பனவு தவறுதல்களை எதிர்கொள்கின்றனர் என்பது கற்பனை கதையொன்றாகும்.

FaLang translation system by Faboba